News January 1, 2025
ரஜினியுடன் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்து பேசி வருகிறார். உடல்நலம் குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்து சொல்லவும் ஓபிஎஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பின் பின்புலத்தில் அரசியல் இருக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு, பாஜக கூட்டணி உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
Similar News
News January 5, 2026
மீண்டும் அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

தமிழகம் வந்துள்ள அமித்ஷா, பியூஷ் கோயல் ஆகியோருடன் 2-ம் நாளாக இன்றும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக தரப்பில் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில். மீண்டும் சந்தித்துள்ள எஸ்.பி.வேலுமணி, NDA கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை விரிவாக ஆலோசித்து வருகிறார்.
News January 5, 2026
BREAKING: திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

ED நோட்டீஸை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி (IP) தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2006-11 வரை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ₹2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக IP மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டும், சொத்து முடக்கம் தொடர்பாகவும் ED நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ED-ஐ அணுக உத்தரவிட்டுள்ளது.
News January 5, 2026
BCCI-யிடம் கேப்டன் கில் வைத்த கோரிக்கை!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், BCCI-யிடம் வைத்த கண்டிஷன் பேசும் பொருளாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக, அணியின் வீரர்களுக்கு 15 நாள் பயிற்சி கேம்ப் நடந்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளாராம். தொடருக்கு முன்பாக, வீரர்களின் Focus & உடலை வலுவாக்கும் இது உதவும் என குறிப்பிடப்படுகிறது. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள இந்திய அணியை இது மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.


