News March 31, 2024
ஒரே சின்னத்தில் ஓபிஎஸ், மன்சூர் அலிகான் போட்டி

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
Similar News
News August 13, 2025
உருவானது காற்றழுத்தம்.. கனமழை வெளுக்கும்!

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. அது நாளை மேலும் வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
News August 13, 2025
பிக் பாஸில் பஹல்காமில் கணவரை இழந்த பெண்!

இந்தியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி நர்வால் பங்கேற்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது நெட்டிசன்களிடையே கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் கேரக்டர் விமர்சிக்கப்படுவதால், இவர் கலந்து கொள்ள வேண்டுமா என வினவுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News August 13, 2025
ஆளுநரின் அழைப்பு..TN காங்கிரஸ் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில் தேநீர் விருந்தை காங்., புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் குளறுபடி, கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலை., உருவாக்குவதற்கான மசோதாவை காலம் தாழ்த்தி ஜனாதிபதிக்கு அனுப்பியது கண்டித்து விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு.