News September 10, 2025

செங்கோட்டையனுடன் கைகோர்த்த OPS தரப்பு

image

EPS-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்து பேசி வருகின்றனர். இது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News September 10, 2025

8 பேட்ஸ்மென்களுடன் களமிறங்கும் இந்தியா

image

UAE-க்கு எதிரான முதல் ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங் அணியை இந்தியா தேர்வு செய்துள்ளது. அதன்படி, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இது சற்றே எதிர்பார்த்த அணிதான் என்றாலும் , சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

News September 10, 2025

மாதம் ₹5,550 வேண்டுமா? உடனே இதை பண்ணுங்க

image

போஸ்ட் ஆபிஸில் MIS (மாதாந்திர முதலீட்டு திட்டம்) மூலம் மாதம் ₹5,550 வரை பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் மாதம் ₹1,000 முதல் டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகளில் அதிகபட்சம் ₹9 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதன்பின், மாதம் ₹5,550 வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தனிநபர் MIS விவரம். இதேபோல், கூட்டு MIS கணக்கும் உள்ளது. விவரத்தை அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸில் அறியலாம். SHARE IT

News September 10, 2025

மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

image

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.

error: Content is protected !!