News March 27, 2025
இபிஎஸ்க்கு வார்னிங் கொடுத்த ஓபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இபிஎஸ், தானாக ராஜினாமா செய்யாவிட்டால் அவமானங்களை சந்திக்க நேரிடும் என ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக ஓபிஎஸ் மீது <<15901584>>இபிஎஸ் <<>>குற்றம்சாட்டியிருந்த நிலையில், நாங்கள் கட்சி ஆபிஸை தாக்கவில்லை, சென்னையில் உள்ள 8 மாவட்டச் செயலாளர்கள்தான் தங்களைத் தாக்கியதாக ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அதிமுக ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிட்டும் என்றார்.
Similar News
News December 8, 2025
FLASH: செங்கல்பட்டு- இருவருக்கு அரிவாள் வெட்டு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் நேற்று செய்யூரை சேர்ந்த தினேஷ், செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரஹிம் ஆகியோர் டாஸ்மாக் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பெண்களுடன் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2014-ல் ₹62-ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது ₹90-க்கும் கீழ் சென்றுள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், இறக்குமதி பொருள்களின் விலையில் எதிரொலிக்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை, மின்னணு பொருள்கள், செல்போன், லேப்டாப், மருந்துகள், கார்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
News December 8, 2025
புடினை தொடர்ந்து இந்தியா வரும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில்தான் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விசிட்டில் PM மோடி அவரிடம் உக்ரைன் உடனான போர் குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து ஜெலன்ஸ்கியும் இந்தியா வரவுள்ளதால், உக்ரைன் தரப்பு கோரிக்கைகளை PM கேட்டறியலாம். இதன்பிறகு, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.


