News October 20, 2024

ஆளுநருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய OPS

image

தமிழ்த்தாய் பாடப்பட்ட விவகாரத்தில், ஆளுநர் R.N.ரவியை வசைபாடுவதை ஏற்க முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திராவிடநல் திருநாடு வரி விடுபட்டது மிகப்பெரிய தவறு எனக் குறிப்பிட்ட அவர், DD தமிழ் நிர்வாகம் செய்த தவறுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும் என வினவியுள்ளார். மேலும், செய்த தவறை DD தமிழ் ஒப்புக்கொண்ட பிறகும், அரசியல் விளம்பரத்திற்காக விமர்சனம் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News July 5, 2025

பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

image

பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். இந்திய ரசிகர்களுக்கு மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP

News July 5, 2025

விஜய்யை கூட்டணிக்கு கூப்பிடவில்லை: கே.என்.நேரு

image

த.வெ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய் திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் கே. என்.நேரு, விஜய்யை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே என தெரிவித்தார். விஜய் குறித்து அண்மையில் பேசிய நேரு, திமுக தொண்டர்கள் MGR போன்ற பெருந்தலைவர்களை சந்தித்தவர்கள். ஆகையால் புதிதாக யார் வந்தாலும் தயக்கமின்றி எதிர்கொள்வோம் என தெரிவித்திருந்தார்.

News July 5, 2025

பெருங்கவிக்கோ உடலுக்கு காவல்துறை மரியாதை..!

image

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்த அவர், கலைமாமணி விருது, திருவள்ளுவர் விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!