News August 5, 2025
விஜய்யுடன் கூட்டணி அமைக்க OPS தரப்பு முடிவு

BJP கூட்டணியிலிருந்து விலகிய OPS, யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில் அவரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க EPS-யிடம் நயினார் ஆலோசித்திருந்தார். ஆனால், OPS தரப்பை இணைக்கக்கூடாது என்பதில் EPS விடாப்பிடியாக இருக்கிறாராம். இதனால், விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து OPS தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசித்ததாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News August 5, 2025
முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய கொள்முதல் நிலையமான ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் கிலோ ₹70-க்கு விற்கப்பட்ட முருங்கை விலை இன்று வெறும் ₹8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், போட்ட முதலீடு கூட கிடைக்கவில்லை எனப் புலம்புகின்றனர்.
News August 5, 2025
சற்றுமுன்: மூன்று பெண் குழந்தைகள் கொடூர கொலை

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி & மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
News August 5, 2025
அமளி நீடித்தால் விவாதமே கிடையாது: கிரண் ரிஜிஜூ

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்றத்தை முடக்கின. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார்.