News September 10, 2025
EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க OPS நிபந்தனை

CM வேட்பாளராக EPS இருக்கக்கூடாது என்று TTV கூறியது, சரியான கருத்து என OPS தெரிவித்துள்ளார். தனக்கு டெல்லியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்ற அவர், ADMK ஒன்றிணையாவிட்டால் திமுகவுக்கே சாதகம் என்றார். மேலும், ஏற்கெனவே EPS உடனான 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவை தீர்க்கப்பட்ட பிறகே EPS-ஐ CM வேட்பாளராக ஏற்பேன் என OPS பதிலளித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.
News September 10, 2025
அக்டோபரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) வரும் அக்டோபரில் மேற்கொள்ள ECI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த மாதத்திற்குள் SIR-க்கான களப்பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிஹாரில் SIR-ன் போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக கூறி எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடின.
News September 10, 2025
திருமண பந்தத்தில் நுழைந்த 9 ஆண்டு காதல் ❤️

பறந்து போ பட நடிகை கிரேஸ் ஆண்டனியின் 9 ஆண்டு கால காதல், திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளது. இசையமைப்பாளர் ஏபி டாம் சிரியக்கை அவர் நேற்று திருமணம் செய்து கொண்டார். கணவரின் முகம் தெரியாமல் முதலில் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தற்போது, காதல் கணவருடன் கைகோர்த்தபடி இருக்கும் படங்களை கிரேஸ் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.