News March 27, 2025
அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க முடியாது: இபிஎஸ்

அதிமுகவில் ஓபிஎஸ்ஸை இணைக்க முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுகவினர் கோயிலாக கருதும் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து ஓபிஎஸ் தாக்கியதாக குற்றம்சாட்டிய அவர், அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் என விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்தாடுவதாகக் கடுமையாகச் சாடினார்.
Similar News
News October 26, 2025
விஜய்யின் நடவடிக்கை சரியா? தவறா?

கரூர் துயரில் விஜய்யின் நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காமல், மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறுவது சரியா என அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர். கரூருக்கு விஜய் செல்லாதவரை படுகாயமடைந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்களின் வலி, வேதனையை அவரால் புரிந்து கொள்ள முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News October 26, 2025
CSK அணியில் வாஷிங்டன் சுந்தர்.. வெளியான தகவல்

CSK அணியில் வாஷிங்டன் சுந்தர் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் ₹3.2 கோடிக்கு வாஷிங்டன் சுந்தரை வாங்கிய நிலையில், அதே தொகைக்கு CSK அவரை டிரேடிங் செய்துள்ளதாக அஷ்வினின் யூடியூப் சேனலில் தகவல் கசிந்துள்ளது. அஷ்வின் IPL-ல் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால், மண்ணின் மைந்தனான ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை CSK அணி தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News October 26, 2025
ராசி பலன்கள் (26.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


