News January 13, 2026
OPS போன்றே கூட்டணி பற்றி பேசிய பிரேமலதா

கூட்டணி தொடர்பாக தேமுதிக மா.செ.க்களை மீண்டும் அழைத்து பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பை வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்தார். இதற்கு காரணம் ஏற்கெனவே, நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தவெக, சிலர் அதிமுக என விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், OPS போன்றே தை பிறந்தால் வழி பிறக்கும் என பிரேமலதா கூறியுள்ளார்.
Similar News
News January 28, 2026
துணை முதல்வர் அஜித் பவார் காலமானார்.. கடைசி போட்டோ

மகாராஷ்டிரா DCM அஜித் பவார் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விமானம் புறப்படும் முன்பாக அஜித் பவார், தனது பாதுகாப்பு அதிகாரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று SM-ல் வைரலாகிறது. ஆனால், இந்த போட்டோவின் உண்மைத்தன்மை உறுதியாக தெரியவில்லை. முன்னதாக, கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்து அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: சரத்குமார்

உங்களை போல கட்சியை கலைக்கும் நிலை விஜய்க்கும் ஏற்படுமா என கேட்கப்பட்டதற்கு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதற்கு தான் 17 ஆண்டுகள் கட்சியை நடத்தியதாகவும், விஜய்யுடன் தன்னை ஒப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தான் கட்சியை கலைக்கவில்லை என கூறிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் விவரித்தார்.
News January 28, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹35,000 மாறியது

<<18982860>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 கிலோ வெள்ளி ₹35,000 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹400-க்கும், 1 கிலோ ₹4 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026 ஜன.1-ல் வெள்ளி 1 கிலோ ₹2.56 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


