News June 19, 2024
OPS நாளை ஆலோசனை

தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நாளை சென்னையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக உரிமை மீட்புக்குழு ஆலோசனையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பலமுறை ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்து என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?
Similar News
News September 14, 2025
நமைச்சலை கக்கும் இதயமற்ற திமுக: விஜய்

வெறுப்பையும், விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் முப்பெரும் விழா (DMK) கடிதத்தில் அழுதுகொண்டிருந்ததாக விஜய் சாடியுள்ளார். கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றி கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று மக்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும், அதன் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது இதயமற்ற திமுகவிற்கு ஒன்றும் புதிதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News September 14, 2025
மாலைநேர உடற்பயிற்சி சிறந்தது: ஏன் தெரியுமா?

* காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.
* காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
* மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.
News September 14, 2025
BREAKING: பள்ளிகளுக்கு கடைசி நேரத்தில் பறந்த உத்தரவு

பள்ளிகளில் <<17705503>>நாளை முதல் காலாண்டுத் தேர்வுகள்<<>> தொடங்கவுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் ‘திறன்’ திட்டத்தில் பயிற்சி பெறும் (கற்றல் குறைபாடுள்ள) மாணவர்களுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வினாத்தாள்களின் மொத்த மார்க், வழக்கமான காலாண்டு தேர்வு மார்க் அளவிலேயே இருக்கும். மாதிரி வினாத்தாள்களை exam.tnschools.gov.in தளத்தில் டவுன்லோடு செய்யலாம். SHARE IT.