News February 23, 2026

OPS நன்றி இல்லாத குணத்தின் உச்சம்: தமிழிசை

image

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பேசிய OPS-ஐ தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். தன்னை முதல்வராக்கிய ஜெயலலிதா, வாழ்நாள் முழுவதும் எதிர்த்த ஒரு கட்சியை எப்படி மீண்டும் ஆட்சிக்கு வரும் என OPS-ஆல் சொல்ல முடிகிறது என தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், நன்றி இல்லாத குணத்தின் உச்சம் அவர் என்றும் தமிழிசை சாடியுள்ளார்.

Similar News

News February 25, 2026

ஊராரின் தாகம் தீர்க்க.. கிணறு தோண்டும் பெண்

image

கர்நாடகாவில், தனி ஆளாக கிணறு தோண்டிய 57-வயது பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் கிணறு தோண்டிய கவுரி நாயக், அதன்பிறகு பள்ளிக் குழந்தைகள், கிராம மக்களின் நலனுக்காக பல கிணறுகளை வெட்டியுள்ளார். அவரது முயற்சியால் அந்த கிராமமே பச்சை பசேலென செழிக்கிறது. இவரை லேடி பகிரதா( புராணத்தின்படி, கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்தவர்) என மக்கள் அழைக்கின்றனர்.

News February 25, 2026

அமைச்சர் நேரு மீது ஏன் வழக்கு பதியவில்லை? இன்பதுரை

image

HC உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது ஏன் வழக்கு பதியவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு MP இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளை மீறுவது ஏன் என கேட்ட அவர், இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடர கூடாது என்றார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழலை ஊக்குவிக்கிறது எனவும் வழக்குப்பதிவு செய்யாவிடில் CBI-க்கு மாற்ற நீதிமன்றத்திடம் கோருவோம் என்றும் கூறியுள்ளார்.

News February 25, 2026

பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

image

அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதார தினத்தையொட்டி மார்ச் 4 அன்று குமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மேற்கூறிய மாவட்டங்களில் மார்ச் 7-ல் பள்ளிகள் செயல்படும். மேலும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, அதனை ஈடு செய்ய மார்ச் 14 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!