News January 26, 2026

OPS-ஐ திமுக கூட்டணிக்கு இழுக்க முயற்சி: நயினார்

image

அமைச்சர் சேகர்பாபு, OPS-ஐ சந்தித்து பேசியது அவரை திமுக கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், TN-ல் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்தாலும் MGR ஆரம்பித்த அதிமுகதான் இன்றைக்கும் ஆளப்போகும் கட்சியாக இருப்பதாக கூறினார். மேலும், கூட்டணி குறித்து தேமுதிக விரைவில் நல்ல முடிவு எடுக்கும் எனவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

விஜய் ‘டீ’, பாஜக ‘காஃபி’.. அண்ணாமலை

image

NDA-வில் இன்னும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அப்போது தவெகவுடன் கூட்டணியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விஜய் ’டீ’, நாங்க (பாஜக) ‘காஃபி’.. இரண்டையும் ஒரே பாத்திரத்தில் எப்படி போட முடியும் எனக்கூறி கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற பாஜக மீது திமுகவினர் மேடைக்கு மேடை பொய் பேசுவதாகவும் சாடினார்.

News February 11, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 606▶குறள்: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. ▶பொருள்: தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

News February 11, 2026

அதிமுக MP வழக்கில் கோர்ட் காட்டம்!

image

அதிமுக MP தம்பிதுரையின் பல்கலை., ஆக்கிரமித்துள்ள நிலங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய TN அரசுக்கு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் & பல்கலை., ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த சர்வே அறிக்கையால் கடும் அதிருப்தியான நீதிபதிகள், 2 வாரங்களில் தங்கள் உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!