News December 12, 2025
OPS-ஐ அதிமுகவில் சேர்க்க தயாராகும் EPS

தென் மாவட்ட நிர்வாகிகளும், பாஜக தலைமையும் கொடுத்த அழுத்தம் காரணமாக, OPS-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க EPS இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல், தனது தலைமையை ஏற்பதாக OPS அறிவிக்க வேண்டும் என்ற கண்டிஷனையும் போட்டுள்ளாராம். அதேபோல், TTV-வை சேர்க்கவே முடியாது என்றும் கூறிவிட்டாராம். நேற்று நயினார் உடனான சந்திப்பின் போது இதுதொடர்பாகத்தான் ஆலோசிக்கப்பட்டதாம்.
Similar News
News December 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 565
▶குறள்:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
▶பொருள்: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
News December 30, 2025
புள்ளிங்கோ அச்சுறுத்தலை நசுக்குக: கார்த்தி சிதம்பரம்

<<18693605>>திருத்தணி சம்பவத்தின்<<>> எதிரொலியாக மாநிலம் முழுவதும் தங்களது சக்தியை போலீஸ் காட்ட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், TN-ல் புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என கூறியுள்ளார். வாகன சோதனையை தீவிரப்படுத்துவதுடன், குற்றப்பின்னணி உடையவர்கள் வாரத்திற்கு 3 முறை காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.


