News March 16, 2024
பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர், கவுல்பாளையம் ஆலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு சில பகுதிகளை பெரம்பலூரில் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15) எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Similar News
News November 16, 2025
பெரம்பலூர்: ட்ரோன் கேமராக்கள் பறக்க விட்டு ஆய்வு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய, சுரங்கத் துறையினர் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தினர். விதிமுறை மீறல்கள், சுற்றுச்சூழல் மீறல்கள் குறித்த புகார்கள் எழுந்ததால், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
News November 16, 2025
பெரம்பலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
பெரம்பலூர்: ஆசிரியர் தகுதி தேர்வில் 181 ஆப்சென்ட்!

பெரம்பலூரில் அரசுப் பள்ளிகள் உட்பட நான்கு மையங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இன்று நடைபெற்றது. மொத்தம் 1238 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1057 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். 181 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்வுப் பணியில், மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டிருந்தனர்.


