News December 3, 2024
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அதானி விவகாரம், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி மக்களவை செயலாளருக்கு திமுக எம்.பி கனிமொழி, TR பாலு உள்ளிட்டோர் நோட்டீஸ் அளித்திருந்தனர். எனினும், இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Similar News
News September 10, 2025
‘96 பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில்

ரசிகர்கள் யாரும் எதிர்பாராத கூட்டணியாக இயக்குநர் பிரேம்குமார், பஹத் பாசில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் எனவும் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார். ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும், விக்ரமுடனான படத்திற்கு திரைக்கதை எழுத வேண்டியிருப்பதாக பிரேம்குமார் தெரிவித்தார்.
News September 10, 2025
திமுகவுக்கு தோல்வி பயம்: தவெக அருண்ராஜ்

விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி தர மறுப்பது திமுகவின் பயத்தை காட்டுவதாக தவெக கொள்கை பரப்புப் பொ.செ அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மக்களிடையே தவெகவிற்கு பெருகி வரும் செல்வாக்கை பார்த்து திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதனால் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திமுக அரசு கொடுக்கும் நெருக்கடி தவெகவுக்கு சாதகமாக முடியும் என்று அருண்ராஜ் கூறினார்.
News September 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 454 ▶குறள்: மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. ▶பொருள்: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.