News August 19, 2025
தலைமை தேர்தல் கமிஷனரை குறிவைக்கும் எதிர்கட்சிகள்

‘வாக்கு திருட்டு’ தொடர்பாக காங்., – EC இடையே வார்த்தைப்போர் நீடிக்கிறது. இந்நிலையில் பார்லிமென்டில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானவேல் குமாருக்கு எதிராக, பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த தீர்மானம் நிறைவேற்ற, இரு சபைகளிலும், மூன்றில் இரண்டு பங்கு M.P.க்கள் ஆதரவு தேவை ஆனால் எதிர்கட்சிகளிடம் அந்த பலமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 19, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தை 2ஆக பிரிக்கும் திமுக

உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் MLA காதர்பாட்சா <<17449428>>முத்துராமலிங்கம் <<>>மீது ஸ்டாலின் கோபமடைந்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அவரை கடும் கோபத்துடன் ஸ்டாலின் வறுத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தை அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கவும் திட்டமிட்டுள்ள திமுக தலைமை, இளம் ரத்தத்தை மாவட்டச் செயலாளராக்கவும் முடிவு எடுத்துள்ளதாம்.
News August 19, 2025
அமைச்சருக்கு 4 நாள்கள் கெடு

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டிட்டோ -ஜாக் ஆசிரியர்கள் அமைப்பு 4 நாள்கள் கெடு விதித்துள்ளது. இந்த 4 நாள்களுக்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, வரும் 22-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து இருந்தது.
News August 19, 2025
₹1000 கோடி வாடகை கொடுக்கும் ஆப்பிள்

ஐபோனை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் தனது புதிய அலுவலகத்துக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்துள்ளது. 13 மாடிகளை கொண்ட அந்த அப்பார்ட்மெண்டில் 9 தளங்களை வாடைக்கு எடுத்துள்ள நிறுவனம், டெபாசிட்டாக ₹31.57 கோடியும், மாத வாடகையாக ₹6.3 கோடியும் செலுத்த உள்ளது. 10 வருட லீஸுக்கு எடுத்துள்ள நிலையில், 10 வருடத்தில் வாடகையாக மட்டும் ₹1,000 கோடியை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.