News October 3, 2025

ராவணனை அழித்த ஆபரேஷன் சிந்தூர்: முர்மு

image

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்தின் ராவணனை எதிர்த்து மனிதகுலம் பெற்ற வெற்றியின் அடையாளம் என்று ஜனாதிபதி முர்மு கூறியுள்ளார். டெல்லியில் நடந்த விஜயதசமி நிகழ்வில் பேசிய அவர், பயங்கரவாதத்தின் அரக்கன் மனிதகுலத்தை தாக்கும்போது, ​​அதை முறியடிப்பது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார். மனிதகுலம் நன்மையின் வெற்றியால் மட்டுமே செழிக்கிறது என்றும் கூறினார்.

Similar News

News October 3, 2025

IND கிரிக்கெட் அணியின் செயல் மூன்றாம் தரம்: பசித் அலி

image

இந்திய கிரிக்கெட் அணி No 1 ஆக உள்ளது, ஆனால் அவர்களது செயல் மூன்றாம் தரமாக உள்ளதாக முன்னாள் பாக்., வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஆசிய கோப்பை டிராபியை நக்வியிடம் இருந்து இந்தியா வாங்க மறுத்ததை சுட்டிக்காட்டி பேசிய அவர், ஒருவேளை ஆசியக் கோப்பை தொடரை ICC நடத்தி, அதில் பாக்., வென்ற பின்னர் ஜெய் ஷா கைகளால் வாங்க மாட்டோம் என்று சொன்னாலும் அது தவறானது என்றார்.

News October 3, 2025

இன்று விசாரணைக்கு வருகிறது கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

image

கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரிய 7 மனுக்கள் இன்று HC மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் தண்டபானி, ஜோதிராமன் அமர்வில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. இதனுடன் இணைந்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களுக்கு விசாரிக்கப்பட உள்ளன.

News October 3, 2025

ஓரவஞ்சனையால் போன உயிர்கள்: EPS

image

கரூர் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 உயிர்கள் போயிருக்காது என EPS குற்றம்சாட்டியுள்ளார். ஓரவஞ்சனை இன்றி எல்லோருக்கும் சமமாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக விமர்சித்த அவர், தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!