News May 16, 2024
கை விரலுக்கு பதில் தவறாக நாக்கில் ஆபரேஷன்

கேரளாவில் 4 வயது சிறுமிக்கு கைகளில் இருந்த 6 விரல்களில் ஒன்றை அகற்ற முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் கைக்குப் பதிலாக வாயில் கட்டு போடப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் விசாரித்ததில், தவறாக நாக்கில் ஆபரேஷன் நடந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் 16 ஆபரேஷன் நடந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும், விரைவில் ஆறாவது விரல் அகற்றப்படும் என மருத்துவமனை சமாளித்துள்ளது.
Similar News
News December 11, 2025
மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க.. மிஸ் செய்யாதீங்க!

சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது. டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளதால், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மாலை தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். டிச.26-ல் 30,000 பேர், 27-ம் தேதி 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பதால், ரெடியா இருங்க.
News December 11, 2025
10-வது தேர்ச்சி போதும்: மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

★SSC-யில் காலியாக உள்ள 25,487 கான்ஸ்டபிள், ரைஃபிள்மேன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
★கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி ★வயது: 18 – 23 ★தேர்ச்சி முறை: கணினி தேர்வு & உடல் திறன் தேர்வுகள் நடைபெறும் ★சம்பளம்: ₹21,700- ₹69,100 வரை ★விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31 ★விண்ணப்பிக்க <
News December 11, 2025
கில் VC-யான போதே சஞ்சு சாம்சன் இடம் காலி: அஸ்வின்!

பிளேயிங் XI-ல் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காதது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பேசிய அஸ்வின், துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்ட போதே, சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் XI-ல் இடம் கிடைப்பது கடினம் என்பது தெளிவாகிவிட்டது என்றார். மேலும், துணை கேப்டனை அணியில் இருந்து நீக்க முடியாது அல்லவா என்ற கேள்வியை எழுப்பிய அவர், சஞ்சுவை 3-வது வீரராக களமிறக்கலாம் எனவும் கூறினார்.


