News August 23, 2025
விரைவில் இந்தியாவில் OpenAI அலுவலகம்

AI கருவிகளின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், OpenAI-யின் புதிய அலுவலகத்தை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் திறக்கவுள்ளதாக, அதன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ChatGPT பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீங்க AI யூஸ் பண்றீங்களா?
Similar News
News March 8, 2026
சர்வதேச மகளிர் தினம் உருவானது எப்படி?

ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் வாழ்த்துகள் பறந்தாலும், அதன் பின்னால் உள்ள வலி, வரலாறு பலருக்கும் தெரிவதில்லை. 1908-ல் வாக்குரிமை, சம பணிநேரம் & சம ஊதியம் கேட்டு நியூயார்க்கில் பெண்கள் வீதியில் இறங்கி போராடினர். 1910-ல் ஜெர்மனியை சேர்ந்த கிளாரா ஜெட்கின் முன்மொழிந்ததன் பேரில், 1917-ல் ரஷ்ய பெண்கள் மார்ச் 8-ம் தேதி நடத்திய Peace and Bread போராட்டமே, பின்னாளில் உலக மகளிர் தினம் உருவாக காரணமானது.
News March 8, 2026
மார்ச் 8: வரலாற்றில் இன்று

*1908 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான திருநெல்வேலி எழுச்சி போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். *1911 – சர்வதேச மகளிர் தினத்திற்கான தீர்மானம் முதல்முதலாக நிறைவேறியது. *1989 – இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிறந்த தினம். *1934- தமிழ் எழுத்தாளர் ML தங்கப்பா பிறந்த தினம். *1972- பாலிவுட் நடிகர் தருண் போஸ் நினைவு தினம்.
News March 8, 2026
7 நாட்களில் நாடு திரும்பிய 52,000 இந்தியர்கள்

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி போக்குவரத்து ஓரளவு திறக்கப்பட்டதன் மூலம் விமான நிறுவனங்கள் வணிக விமானங்களை இயக்குகின்றன என்றும், மார்ச் 1 முதல் 7-ம் தேதி வரை வளைகுடா நாடுகளில் இருந்து 52,000 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.


