News February 23, 2025
அப்பாவான OpenAI CEO சாம்

OpenAI CEO சாம் ஆல்ட்மேனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே பிறந்துள்ளதால், NICUவில் வைத்து பராமரிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், இருப்பினும் குழந்தை ஆக்டிவ்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம் தனது நீண்ட நாள் காதலியான ஆலிவரை, கடந்த 2024ல் திருமணம் செய்தார்.
Similar News
News February 23, 2025
மெஹந்தியை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க..!

*நரை முடியை மறைக்க, மெஹந்தி கிரீன் டீயில் ஊற வைத்து, தயிர், முட்டை சேர்த்து முடியில் தடவவும். 2-3 மணி நேரம் கழித்து கழுவவும் * மெஹந்தியை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மெஹந்தி, வெந்தய தூள், பிராமி பவுடரை சேர்த்து முடியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும் * மெஹந்தியுடன் தயிர் கொஞ்சம் தேன் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் போட்டு கழுவினால், இது ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனர்.
News February 23, 2025
மோடி- டிரம்ப்- நான் பேசினால் ஆபத்தா? மெலோனி

மோடி, டிரம்ப் மற்றும் தன்னைப் போன்ற தலைவர்களின் செயல்பாடுகள், இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார். தேச நலன்களை பற்றி தாங்கள் பேசும்போது, ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக இடதுசாரிகள் கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் வெற்றி பெறுவது அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 23, 2025
மோசமான சாதனையை படைத்த இந்தியா!!

ODIல் இந்திய அணி, தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்று, தொடர்ச்சியாக அதிக முறை டாஸ் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. 2023 உலகக்கோப்பையில் தொடங்கி தற்போது வரை ஒருமுறைக்கூட இந்தியா டாஸை வெல்லவில்லை. இப்பட்டியலில் 2வது இடத்தில் நெதர்லாந்து அணி (11 போட்டிகளுடன்) உள்ளது. Stay tuned with Way2News for INDvsPAK match updates.