News April 1, 2024
இன்னும் ரூ.8,202 கோடி நோட்டுகள் மட்டும் வரவில்லை

₹2,000 நோட்டுகளில் 97.69 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2023, மே 19ஆம் தேதி ₹2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது ₹ 3.56 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, ₹8,202 கோடி மதிப்புள்ள ₹2,000 நோட்டுகள் மட்டுமே மக்களிடம் புழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
உயிருக்கு போராடும் நடிகருக்கு உதவிய தனுஷ்

துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு சீரிஸாக இருக்கிறார். உதவிக்கு கூட ஆள் இல்லாமல், எப்போது வேண்டுமானாலும் உயிர்போகும் என்ற பரிதாப நிலையில் இருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு ₹5 லட்சம் கொடுத்துள்ள நடிகர் தனுஷ், ‘நண்பா மீண்டும் வந்துவிடுவாய்’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.
News August 12, 2025
விஜய்யை நேரடியாக சாடிய திருமாவளவன்

தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலைகளின் போது, பெரிய கட்சிகள் மௌனம் காப்பதாக திருமாவளவன் சாடியுள்ளார். புதிய கட்சிகளும் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவித்த அவர் ஆணவக் கொலையை விஜய்யால் கூட கண்டிக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி சென்ற EPS, கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
News August 12, 2025
தொடரும் போர்! மோடியிடம் கோரிக்கை வைத்த ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதல் குறித்து PM மோடியுடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார். போர் நிலவரம் குறித்து ஜெலன்ஸ்கியிடம் கேட்டறிந்ததாக X தளத்தில் தெரிவித்த மோடி, போரை நிறுத்த இந்தியாவால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.