News April 7, 2025
தினம் ரூ.200 மட்டுமே… முடிவில் ரூ.28 லட்சம்

தினம் ₹200 என்ற அளவில், மாதம் ₹6000 முதலீடு செய்தால், ₹28 லட்சம் வரை பெறும் Jeevan Pragati திட்டத்தை LIC வழங்குகிறது. 12 – 45 வயதினர் இதில் இணையலாம். 12 முதல் 20 ஆண்டு பாலிசி காலம் கொண்ட இத்திட்டத்தில், 20 ஆண்டு முடிவில் ₹14,40,000 கிடைக்கும். இதனுடன் கூடுதல் பெனிபிட்களுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை பெறலாம். சேமிப்புடன் லைப் இன்ஷூரன்ஸும் வேண்டுவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.
Similar News
News September 14, 2025
வங்கியில் 13,217 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

வங்கிகளில் காலியாக இருக்கும் 13,217 பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி: பட்டம், எல்எல்பி, டிப்ளமோ, சிஏ, எம்பிஏ/பிஜிடிஎம் முடித்தவர்கள் தகுதியுடையவர்கள். முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இதற்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News September 14, 2025
விஜய்க்கும் அந்த உண்மை தெரியும்: மா.சுப்பிரமணியன்

திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றாமல் பொய் சொல்லி வருவதாக <<17702086>>விஜய்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மா.சுப்பிரமணியன், அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுவதாகவும், இந்த உண்மை விஜய்க்கும் தெரியும் என்றார். மேலும், விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சாடினார்.
News September 14, 2025
ரேஷன் பொருள்கள் கிடைக்கலையா? இத செய்யுங்க

நமக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாகவோ (அ) குறைந்த விலையிலோ கிடைப்பதால் அதனை எந்த குறையும் சொல்லாமல் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு, பொருள்கள் கிடைக்கவில்லை போன்ற பிரச்னைகள் இருந்தால் அதனை அரசிடம் தெரிவிக்கலாம். இதற்கு, <