News December 15, 2024

அப்போ மட்டும் தேவை; இப்போ வேண்டாமா? வேல்முருகன்

image

ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பிறகு தேவைப்படுவது இல்லை என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கடலூரில் பேட்டியளித்த அவர், “தேர்தலின்போது முதல்வருடன் கூட்டணி கட்சித் தலைவர்களை அமர வைப்பார்கள். பிறகு ‘ப்ரோடோகால்’ எனக் கூறி புறம் தள்ளுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Similar News

News September 15, 2025

இடது கையில் Watch கட்டுவது ஏன் தெரியுமா?

image

யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை என்றாலும் தானாகவே வாட்ச்சை இடது கையில் கட்டும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா? பெருவாரியான மக்கள் Right Handers என்பதால், அன்றாட வேலைகளை செய்யும்போது இடையூறு ஏற்படாமல் இருக்க Watch-ஐ இடது கையில் கட்டுகின்றனர். இதனால் வாட்ச் சேதமாவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. இவர்களுக்காக தான் வாட்ச்களின் பொத்தான்களை பெரும்பாலான கம்பெனிகள் வலது பக்கத்தில் வைக்கிறதாம்.

News September 15, 2025

BREAKING: நாய் கடித்து 22 பேர் மரணம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

image

நாய்க்கடி தொடர்பான அதிர்ச்சிக்குரிய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இந்தாண்டில் 8 மாதங்களில் மட்டும் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாய் கடியை தடுப்பதற்கும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

ட்ரெண்டிங் AI retro saree போட்டோஸ் உருவாக்க

image

இன்ஸ்டாவில் AI retro saree புகைப்படங்கள் ட்ரெண்டாகி உள்ளது. பலரும் AI retro saree படங்களை உருவாக்க சிரமப்படுகின்றனர். நீங்களும் சிரமப்படுகிறீர்களா? தரமான படத்தை உருவாக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. கடைசி படம்தான் ரொம்ப முக்கியம். இதை பின்பற்றி தரமான படத்தை உருவாக்கி போஸ்ட் பண்ணுங்க. இது உங்களுக்கு உதவியாக இருந்ததா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!