News May 17, 2024
கோலியால் மட்டுமே அதை செய்ய முடியும்

அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் ரன்களை குவிப்பது சிரமம் என பஞ்சாப் அணி வீரர் ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். அனைத்து டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பதாக ஆதங்கம் தெரிவித்த அவர், தொடர்ந்து ரன்களை கோலியால் மட்டுமே குவிக்க முடியும் என்றார். முன்னதாக பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதிய போது ரைலீ ரூஸோவ் மற்றும் கோலி இருவரும் சைகைகள் மூலம் மாறிமாறி மோதிக்கொண்டனர்.
Similar News
News November 29, 2025
புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News November 29, 2025
தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமை பொருட்கள் விநியோகம்

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கு 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய நாட்களில் 65 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதி உடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடைமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார்.


