News March 26, 2025
4 நாட்கள் மட்டுமே… பெண்களே உடனே அப்ளை பண்ணுங்க

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘<<15896531>>மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம்<<>>’ என்ற சிறுசேமிப்புத் திட்டம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்திட்டத்தில், பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும். வட்டி விகிதம் அதிகபட்சம் ஆண்டுக்கு 7.5%. இதில் இதுவரை சேராதவர்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு தபால் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News November 21, 2025
இன்றுடன் விடைபெறும் CJI கவாய்

சுப்ரீம் கோர்ட் CJI-ஆக BR கவாய்க்கு இன்று கடைசி நாளாகும். வரும் 23-ம் தேதியுடன் அவர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நாட்டின் 53-வது CJI-ஆக சூர்யகாந்த் வரும் 24-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக நேற்று நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில், தான் புத்த மதத்தை பின்பற்றினாலும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் மதச்சார்ப்பற்றவனாக இருந்தேன் என கவாய் தெரிவித்தார்.
News November 21, 2025
கூட்டணி அமைச்சரவை உருவாகும்: பிரேமலதா

2026-ல் தமிழக அரசியலில் மாய மந்திரம் நடக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் அனைவருக்கும் பங்கும், கூட்டணி அமைச்சரவையும் இந்த தேர்தலில் உருவாகும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும் மக்களும், தொண்டர்களும் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை சாத்தியமா?
News November 21, 2025
வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா?

காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இது நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டீ தூளில் உள்ள கஃபைன், டானின் ஆகியவை வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். மேலும், அமிலத்தன்மையை அதிகரித்து குமட்டலை உண்டாக்கும் என்றும், பற்களில் கறைகள் உண்டாகி அது நிரந்தரமாகிவிட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.


