News June 19, 2024

ஆங்கில ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பயிற்சி

image

அரசுப் பள்ளிகளில் 6 – 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் வரும் 28ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்களிடம் ஆங்கில மொழியை எளிதில் கற்பிக்கும் வகையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி&பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பள்ளிகளில் உள்ள உயர் தர கணினி ஆய்வகங்களில் நடத்தப்பட உள்ளது.

Similar News

News September 11, 2025

SPORTS ROUNDUP: Boxing-ல் இந்திய வீராங்கனை அசத்தல்!

image

*உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மகளிர் 80 கிலோ பிரிவில் நுபுர் ஷியாரன்(IND) 4-1 என சோடிம்போவாவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து Semi-க்கு முன்னேறினார்.
*உலக கோப்பை கால்பந்து: தகுதிச்சுற்றில் ஈகுவடாரிடம் 1- 0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா தோல்வி. இப்போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை.
*Pro kabbadi: யு மும்பா அணியை 45-37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்.

News September 11, 2025

உதயநிதி ஸ்டைலில் அன்புமணி எடுத்த செங்கல்!

image

2021 தேர்தல் பிரசாரத்தின்போது, எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை விமர்சிக்கும் வகையில், AIIMS என எழுதப்பட்ட செங்கலை காட்டி உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கடலூரில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக திமுக அரசால் நாட்டப்பட்ட அடிக்கல்லை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததாக, அன்புமணி கூறினார். கல்லூரி கட்டுமானத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News September 11, 2025

காலையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க இந்த தேநீர் குடிங்க!

image

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் மசாலா டீ உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* கிராம்பு, பச்சை ஏலக்காய், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை & பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
*இதனுடன் ஜாதிக்காய், உலர்ந்த இஞ்சி தூள் & குங்குமப்பூ சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்.
*டீ செய்யும் போது, அதில் இந்த பொடியை கலந்தால், மசாலா டீ ரெடி. SHARE IT.

error: Content is protected !!