News August 23, 2025

ஆன்லைன் கேமிங் மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்

image

ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் கேம்களை தடை செய்யும் வகையில் ‘ஆன்லைன் கேமிங் மசோதா 2025’-யை நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்பின் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம் இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது. இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

திமுகவுக்கு போட்டியே கிடையாது; கே.என்.நேரு

image

2026 தேர்தலில் திமுகவுக்கு போட்டியே கிடையாது; எதிரில் யார் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் எம்ஜிஆருக்கு மகளிர் ஆதரவு இருந்தது. ஆனால், அவரை விட தற்போது மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது எனக் கூறிய அவர், CM-ஐ யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதல்வர் என்று விஜய்க்கு நாசுக்காக பதிலடி கொடுத்தார்.

News August 23, 2025

BREAKING: உங்களிடம் பழைய பைக் இருக்கா? இனி ₹2,000

image

20 ஆண்டுகளுக்கு மேல் (2005-க்கு முன் வாங்கிய) பழமையான வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ₹5,000-லிருந்து ₹10,000ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ₹2,000ஆகவும், 3 சக்கர வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ₹5,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News August 23, 2025

அதற்காக சூனியம் செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன்

image

‘பரதா’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பாரா என்பதில் தனக்கு சந்தேகம் இருந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால், அவரை எப்படியாவது இப்படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காக சூனியம், பூஜை செய்ததாக கூறியுள்ளார்.

error: Content is protected !!