News August 18, 2024
சின்ன வெங்காயம் விலை குறைந்தது

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் அங்கு ₹35 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று ₹10க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளில் கிலோ ₹50-60 வரை விற்பனையாவதால், விரைவில் அனைத்து இடங்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 27, 2025
கம்பீர் நீக்கப்படுகிறாரா? BIG REVEAL..

தெ.ஆ., அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் கோச் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் அதனை பிசிசிஐ தற்போது மறுத்துள்ளது. கம்பீரை நீக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும், 2027 WC வரை அவரே கோச்சாக தொடர்வார் எனவும் BCCI விளக்கமளித்துள்ளது. மேலும் அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியில் கம்பீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
இதை கட்ட ₹24 லட்சம் செலவு.. ஊழலில் மலிந்துள்ள நாடு!

இந்தியா ஏழை நாடல்ல, ஏழையாக்கப்பட்ட நாடு என்ற கூற்று, இது போன்ற சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது. மேலே உள்ள போட்டோவை பாருங்க.
ம.பி.யின் ஜுன்னார்தேவ் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமூகநல கட்டடம் இது. இந்த 15 தூணை கட்ட சுமார் ₹24 லட்சத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செலவு செய்துள்ளனர். ஒரு மூட்டை சிமெண்டுக்கு ₹1.92 லட்சம் எனவும் கணக்கு எழுதி வைத்துள்ளனர். மக்களின் வரி பணம், இப்படிதான் வீணாகிறது!
News November 27, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.


