News May 8, 2025
தொடரும் பீரங்கி தாக்குதல்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தார், ரஜவுரி பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, மார்ட்டர் மற்றும் ஹெவி ஆர்ட்டிலரி பீரங்கிகளை கொண்டு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
Similar News
News May 8, 2025
சிபிஎஸ்இ 10, 12 தேர்வு: மறுமதிப்பீட்டில் புதிய முறை

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு மறுமதிப்பீட்டில் புதிய முறை அமலுக்கு வருகிறது. இதுவரை மதிப்பெண் சரிபார்ப்புக்கு விண்ணப்பித்து, பின் விடைத்தாள் நகலை பெற்று, மறுமதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் புதிய முறையில், மாணவர்கள் முதலில் திருத்திய விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதன்பின் மதிப்பெண்கள் சரிபார்ப்பு (அ) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 2024-25-ல் தேர்வு எழுதியோர் இதை பயன்படுத்தலாம்.
News May 8, 2025
பாகிஸ்தான் சொல்வது உண்மையா?

இந்தியா ஏவிய டிரோன்களை <<16345828>>சுட்டு வீழ்த்தியதாக<<>> பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக லாகூர் விமான நிலைய ரேடார் நிலையத்தில் கிடந்த டிரோன் பாகங்களை அந்நாட்டு ராணுவம் காட்டியது. ஆனால், அப்படி இருக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள். ஏன் தெரியுமா? இந்த சூசைட் டிரோன்கள் இலக்கை அடைந்தவுடன் தானே வெடித்து சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆகவே, பாக்., கூறுவது அவ்வளவு நம்பும்படியாக இல்லை.
News May 8, 2025
PBKS vs DC: மழையால் தாமதமாகும் ஆட்டம்

PBKS மற்றும் DC அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இந்த ஆட்டத்தில் வென்றால், முதல் அணியாக PBKS அணி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெல்லும்? கமென்ட்டில் சொல்லுங்கள்.