News March 29, 2024
தமிழகத்தில் ஒருவாரம் கூடுதல் விடுமுறை

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை ( பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப்.4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதலாக கோடைவிடுமுறை கிடைக்கும்.
Similar News
News August 31, 2025
காலையில் இந்த அறிகுறிகள் தெரியுதா.. உஷார் ப்ளீஸ்!

சிறுநீரகத்தில் கல் இருந்தால் காலையில் எழுந்ததும்,
1. உடல் சோர்வாகவே இருக்கும்.
2. எழுந்தவுடன் அல்லது குளித்தவுடன் தோலில் அரிப்பு ஏற்படும்.
3. நுரையீரலில் திரவத்தன்மை அதிகரிப்பதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
4. உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
5. பாதங்களில் வீக்கம் இருக்கும்.
6. காலையில் வாந்தி & குமட்டல் வரும் உணர்வு ஏற்படும். டாக்டரை அணுகி, உடனே சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். SHARE IT.
News August 31, 2025
பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா? கனிமொழி கேள்வி

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கடல் உணவுகள், 50% வரி விதிப்பால் பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில், நடுக்கடலிலேயே சரக்குகள் திருப்பி அனுப்பப்படும் அவலத்தை பார்க்க வேதனையாக உள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார். மீனவர்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பாஜக அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 31, 2025
ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்..

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஏதாவது இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும். SHARE IT.