News March 18, 2024
ஆற்காடு நகராட்சிக்கு ஆயிரம் பூவரசு மர விதைகள்

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நடராஜ் நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் பல்வேறு இயற்கை பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் ஆயிரம் பூவரசு மர விதைகளை ஆற்காடு நகராட்சிக்கு வழங்கினார்.
Similar News
News April 3, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News April 2, 2025
இராணிப்பேட்டை: காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை

இராணிப்பேட்டை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஏப்ரல் 02) அன்று காமாட்சி ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்குள்ள பக்தர்கள் அனைவரும் பூஜையில் கலந்துக்கொண்டு அம்மனின் தரிசனத்தை பெற்றுக்கொண்டனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
News April 2, 2025
குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.