News August 29, 2024

ஒரு பொருள்.. பல சொல்..

image

*பூமி – உலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
*சந்திரன் – திங்கள், மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி
*அழகு – எழில், வனப்பு, கவின், வடிவு, அணி
*குழந்தை – மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு, மழலை
வயல் – பழனம், கழனி, கமம்
*இரத்தம் – குருதி, உதிரம், சோரி, கறை
*வனம் – காடு, ஆரணியம், கானகம், அடவி

Similar News

News July 7, 2025

கேப்டன்ஷிப் ரெக்கார்ட்… சாதனை படைத்த கில்!

image

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், கேப்டன் கில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெளிநாட்டில் இளம் வயதில் டெஸ்ட் போட்டியை வென்ற வீரர் என்ற பெருமையை கில்(25 ஆண்டுகள் 297 நாட்கள்) பெற்றார். இதற்கு முன்னர் கவாஸ்கர் (26 ஆண்டுகள் 198 நாட்கள்) இச்சாதனையை செய்திருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் தான் இந்தியாவின் பிரின்ஸ் என நிரூபித்து வருகிறார் கேப்டன் கில்.

News July 7, 2025

திருச்செந்தூரானை எப்போது தரிசித்தாலும் புண்ணியம்

image

‘சொல்ல சொல்ல இனிக்குதடா’ என்பதைப் போல முருகனை நினைக்க நினைக்க வாழ்வில் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட திருச்செந்தூர் முருகப் பெருமானின் மனம் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்ற குடமுழுக்கால் குளிர்விக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று முதல் ஆக.5 வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாள்களில் பக்தர்கள் எப்போது தரிசனம் செய்தாலும் குடமுழுக்கில் கலந்து கொள்கின்ற புண்ணியம் கிடைக்கும். அரோகரா!

News July 7, 2025

உலக போர் வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

image

உக்ரைன் & மத்திய கிழக்கில் நடந்து வரும் போர்களை சுட்டிக்காட்டி, எப்போது வேண்டுமானாலும் உலக போர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வல்லரசுகளின் சர்வாதிகார போக்கால், நாடுகளிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அன்பு குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

error: Content is protected !!