News December 27, 2024
ஒரே கையெழுத்து.. ரூ.72,000 கோடி தள்ளுபடி

சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாவது சகஜமாகிறது. இதற்கெல்லாம் மூலம் மன்மோகன்சிங்தான். ஆம். 2008ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக பதவியேற்றதும் அவர் ரூ.72,000 கோடி வேளான் கடன் தள்ளுபடிக்கான உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். இதனால் 3 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். இதனாலேயே 2ஆவது முறையாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது எனலாம்.
Similar News
News September 12, 2025
உத்தராகண்டிற்கு ₹1,200 கோடி நிவாரணம்

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு PM மோடி ₹1,200 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். டேராடூனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்த அவர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்சாப்பிற்கு ₹1,500 கோடி, இமாச்சலுக்கு ₹1,600 கோடி அறிவித்து இருந்தார்.
News September 12, 2025
ராசி பலன்கள் (12.09.2025)

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – போட்டி ➤ கடகம் – தனம் ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – தாமதம் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – கோபம் ➤ கும்பம் – திறமை ➤ மீனம் – புகழ்.
News September 12, 2025
KYC-ஐ புதுப்பிக்க RBI கொடுத்துள்ள கெடு

சரியான நேரத்தில் உங்களின் வங்கிக் கணக்குக்கான KYC-ஐ புதுப்பிக்கவில்லை என்றால் கணக்கு செயலிழக்க வாய்ப்புள்ளது. வங்கி அமைப்பின் பாதுகாப்பை அதிகரிக்க KYC புதுப்பிப்பை RBI கட்டாயமாக்கியுள்ளது. KYC-ஐ புதுப்பிக்க, கிராமப்புறத்தில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள கிராம பஞ்சாயத்து முகாமுக்குச் செல்லலாம். செப்., 30-ம் தேதிக்குள் KYC புதுப்பிப்பது கட்டாயம் என RBI தெரிவித்துள்ளது.