News March 17, 2024
தேனி அருகே ஒருவர் பலி – போலீசார் விசாரணை
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் உ.அம்மாபட்டி சாலையிலுள்ள புதிய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று (மார்ச்.16) தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2024
தேனி: பெண்கள் சுயதொழில் துவங்க 50,000 மானியம்
தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*
News November 19, 2024
நெல் பயிருக்கு காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ராபி சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி தேதி நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.