News October 24, 2024

’ஒற்றைப் பனைமரம்’ படத்தை திரையிடக் கூடாது: சீமான்

image

ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ’ஒற்றைப் பனைமரம்’ படத்தை திரையிடக் கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் பொய்ப் பரப்புரையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாவீரர் தெய்வங்களை இழிவுபடுத்த, அவதூறு பரப்ப முயலும் படைப்பை நாதக அனுமதிக்காது என்றும், இப்படத்தை தமிழ் மண்ணில் திரையரங்க உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 17, 2026

சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார்

image

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு காங்., தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில்<<18883890>> உயர்நிலைக் கூட்டத்தில்<<>> பங்கேற்றபின் பேசிய அவர், MP, MLA-க்களின் கருத்துகளை தலைமை கேட்டுக் கொண்டது என்றார். அதன் அடிப்படையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு TN காங்கிரஸ் கமிட்டி கட்டுப்படும் எனவும் அவர் கூறினார்.

News January 17, 2026

பள்ளி மாணவர்களுக்கு மேலும் 3 நாள்கள் விடுமுறை

image

ஜன.14 – 18 வரை பொங்கல் விடுமுறையை பள்ளி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 4-வது வாரத்திலும் 3 நாள்கள் விடுமுறை வருகிறது. அதாவது, ஜன.26 குடியரசு தினம் திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை வருகிறது. இதனால் இந்த மாதமே விடுமுறை மாதம் தான் என மாணவர்கள் சிலாகிக்கின்றனர். எனவே, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், இதற்கேற்ப முன்பதிவு செய்யுங்கள்.

News January 17, 2026

பிரபல நடிகை காலமானார்

image

நடந்து சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை கியானா அண்டர்வுட் (33) மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘All That’ என்ற சீரிஸில் 7 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், The 24 Hour Woman, Death of a Dynasty ஆகிய படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது இறப்புக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!