News July 25, 2024
நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கரூரில் ₹100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், பிரவீண் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
பாஜகவுக்கு DCM பதவியா? நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் உள்பட முருகனின் அறுபடை வீடுகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நயினார், கூட்டணிப் பங்கீடு பற்றி இன்னும் பேச தொடங்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அதிமுக கூட்டணியில் பாஜக DCM பதவி கேட்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என அவர் பதிலளித்துள்ளார்.
News March 3, 2026
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவில் OPS இணைந்ததால், அவரின் ஆதரவாளர்கள் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், OPS-ன் வலது கை போல் செயல்பட்டு வந்த மார்க்கையன்கோட்டை முன்னாள் சேர்மன் அகிலன், பெரியகுளம் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும், தங்களின் வீடுகளில் இருந்த OPS புகைப்படத்தை அகற்றிவிட்டு, EPS-ன் புகைப்படத்தையும் வைத்துள்ளனர்.
News March 3, 2026
இந்தியாவின் டாப் 5 பணக்கார கோயில்கள்!

இந்தியாவில் துட்டு கொட்டோ கொட்டு’னு கொட்டும் கோயில் திருப்பதி என அனைவரும் அறிவோம். ஆனால், திருப்பதியை போலவே நாட்டின் பணக்கார கோயில்கள் லிஸ்ட் உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அந்த லிஸ்ட்டை பார்க்கவும். இவற்றில் எந்தெந்த கோயில்களில் நீங்க தரிசனம் செஞ்சிருக்கீங்க?


