News October 22, 2025
தீபாவளியில் ஒரு லட்சம் கோடி UPI பரிவர்த்தனை!

நடப்பு மாதத்தில் UPI பரிவர்த்தனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பரை காட்டிலும், நடப்பு மாதத்தில் நாளொன்றின் சராசரி பரிவர்த்தனை 13% அதிகரித்து ₹94,000 கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும், தீபாவளிக்கு முதல் நாளில் மட்டும் உச்சபட்சமாக 74 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன்மூலம் தினசரி பரிவர்த்தனை ஒரு லட்சம் கோடியை தாண்டியது. GST 2.0, பண்டிகை காலம் ஆகிய காரணங்களால் உச்சம் தொட்டுள்ளது.
Similar News
News April 4, 2026
நாமக்கல்: உங்களிடம் ரேஷன் கார்டு உள்ளதா?

நாமக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News April 4, 2026
திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். அந்த வகையில், கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினரும், திமுக மூத்த நிர்வாகியுமான TR சண்முகசுந்தரம், குடும்ப சூழல் & பணி சுமை காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை EX அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான Dr.விஜய் திமுகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
News April 4, 2026
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது ஏன்? TTV

தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாததற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை என TTV தினகரன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாள்களுக்கு முன்னரே தேர்தலில் போட்டியிட போவதில்லை, அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செல்ல போகிறேன் என தன்னிடம் அண்ணாமலை கூறியதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது அவரது தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார்.


