News March 16, 2024
தஞ்சை அருகே கார் டயர் வெடித்து ஒருவர் பலி

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை பகுதியில், இன்று காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில், லால்குடி திண்ணியம் பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 31, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறை கேட்பு

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மேயரிடம் தங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மேயர் உறுதி
News October 30, 2025
தஞ்சை: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

தஞ்சை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


