News March 17, 2024

மூதாட்டி கொலை ஒருவர் கைது

image

அரியலூர் செந்துறை அடுத்த இலங்கைச்சேரியை சேர்ந்த பவளக்கொடி என்பவர் கடந்த வியாழக்கிழமை(மார்ச்.14) அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. மருத்துவ செலவிற்கு அடமானம் வைக்க அவரது நகையை கேட்டதாகவும், தர மறுத்த பவளக்கொடியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. சரஸ்வதியை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News January 18, 2026

அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

image

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News January 18, 2026

அரியலூர்: சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவை முடித்துவிட்டு மீண்டும் ஈரோடு செல்லும்போது ஆத்தூர் டு சேலம் ரோட்டில் திடீரென எதிரே வந்த கார் நிலை தடுமாறி மோதியதில் சுரேஷ் மனைவி ஜெயப்பிரியா மற்றும் அவரது மகன் தஸ்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுரேஷ் பலத்த காயங்களுடன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 18, 2026

அரியலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> பிப்.4-க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!