News August 24, 2025
ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் 6 மாதங்களுக்கு மீண்டும் வராது!

மழைக்காலம் என்பதால் பல இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த அக்டோபரில் பரவத் தொடங்கிய ஃப்ளூ பாதிப்பு, இந்தாண்டு மார்ச் வரையிலும் நீடித்தது. ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு வராது எனக் கூறும் டாக்டர்கள், அதன்பின் அதனுடைய மரபணு முழுமையாக மாற்றம் அடைவதால் மீண்டும் வரலாம் என்கின்றனர். அதனால் ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஜாக்கிரதை மக்களே!
Similar News
News August 25, 2025
தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பிய இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஜெயசூர்யா என்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். திருச்சி அருகே நடத்த விபத்தில் காயமடைந்த அவர், ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநாட்டுக்கு சென்று திரும்பிய வழியில் பிரபாகரன், ரித்திக் ஆகியோர் பலியான நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளது, தவெக தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 25, 2025
வசூலை அள்ளியதில் ‘கூலி’ படத்துக்கு எத்தனாவது இடம்?

இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘சாவா’ பாடம் உள்ளது. ₹808 கோடியுடன் சாவா முதல் இடத்திலும், குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வசூலை வாரிக்குவித்த ‘சயாரா’ ₹542 கோடியுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகி 10 நாட்களில் ₹468 கோடியை வசூல் செய்து 3-வது இடத்தில் உள்ளது. கூலியுடன் வெளியான வார்(₹300 கோடி), ஹவுஸ்புல் 5(₹292 கோடி) ஆகிய படங்கள் அடுத்த வரிசையில் உள்ளன.
News August 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 25, ஆவணி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை