News March 17, 2024
ஒரு காலத்தில் என் கணவர் எனக்கு எதிரியாக இருந்தார்

ஒரு காலத்தில் தனது கணவர் எனக்கு எதிரியாக இருந்தார் என நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். ‘என் கணவர் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை. எனக்கும் அவரைப் பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே எனக்கு எதிரியாகி விட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதைவிட மோசமானது வேறு என்ன இருக்க முடியும்? என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2010இல் சாம்ராட் தஹல் என்பவரை மணந்த அவர் 6 மாதத்தில் விவாகரத்து பெற்றார்.
Similar News
News April 8, 2025
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்: அமைச்சர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் நேரில் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கடன் வழங்கும் நடைமுறை தற்போது இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் முறை தொடங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
News April 8, 2025
வங்கதேசத்தின் முடிவால் இந்தியாவிற்கு பாதிப்பு

USA-விடம் இருந்து வரி இல்லாமல் பருத்தியை வாங்கும் முடிவை வங்கதேச அரசு டிரம்ப்பிடம் முன்வைத்துள்ளது. வங்கதேச இறக்குமதிகளுக்கு USA 37% வரி விதித்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது இந்தியாவிடம் இருந்து ஆண்டுக்கு $2 பில்லியன் என்ற அளவில் பருத்தி, நூலை வங்கதேசம் வாங்கி வருவதால், அந்நாட்டின் தற்போதைய முடிவு இந்தியாவிற்கு வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும்.
News April 8, 2025
சென்னைக்கு 220 ரன்கள் இலக்கு

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ப்ரியன்ஷ் ஆர்யாவின் அதிரடி சதத்தால் அந்த அணி 219 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஷஷங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சென்னை அணி மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.