News August 16, 2024
ஆக.20ல் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்படுகிறது

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி ஆக.20 ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் ஆக.17 ஆம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விதிகளின்படியே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
Similar News
News November 5, 2025
தேர்தல் வியூகம்: இபிஎஸ் ஆலோசனை

அதிமுக தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிப்பது, தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானம் செய்யும் முயற்சியும் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
News November 5, 2025
சற்றுமுன்: விஜய் பாதுகாப்பு வாகனம் விபத்து

பொதுக்குழுவில் பங்கேற்க மாமல்லபுரத்திற்கு விஜய் வருகை தந்தபோது, பவுன்சர்கள் சென்ற வாகனம், மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை; கார் மட்டும் சேதமடைந்துள்ளது. கரூர் பரப்புரைக்கு சென்றபோதும், விஜய்யின் பவுன்சர்கள் வாகனம் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
கோர ரயில் விபத்து..11 அப்பாவி பயணிகள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் ஜெயராம் நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. நேற்று (நவ.11) மாலை 4 மணிக்கு நடந்த இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு, ரெட் சிக்னல் விழுந்தும் பயணிகள் ரயிலை நிறுத்தாததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


