News May 31, 2024
ஆம்னிப் பேருந்து டிக்கெட் விலை 2 மடங்காக உயர்வு

வார விடுமுறையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சூழலில், ஆம்னிப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாளில் ₹500-₹1000 வரை இருக்கும் டிக்கெட் விலை, வார இறுதியில் ₹1000-₹2000 வரை உயர்ந்துவிடுகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் அவதிப்படும் சூழலில், அனைத்து நாள்களும் ஆம்னி பேருந்தின் டிக்கெட் விலையை ஒரே மாதிரி நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News September 19, 2025
ரோபோ சங்கர் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு: இபிஎஸ்

நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான <<17754481>>ரோபோ சங்கரின் மறைவு<<>> அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாக இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறு, சிறு விழா மேடைகளில் தொடங்கி, TV, சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் முன்னேறியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். அதிமுகவின் பல மேடைகளில் சிறப்பாக செயல்பட்ட அவரது இழப்பு கட்சிக்கும், சினிமா துறையினருக்கும் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 19, 2025
வரலாறு காணாத குறைவு.. மிகப்பெரிய தாக்கம்

USA டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 29 காசுகள் சரிந்து ₹88.13 ஆனது. USA பெடரல் வங்கி 0.25 புள்ளிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதோடு இந்தாண்டின் பிற்பகுதியில் மேலும் குறையும் என கூறியுள்ளது. மேலும், இந்தியா மீதான USA வரிவிதிப்பு, உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News September 19, 2025
OFFICIAL: ரோபோ சங்கர் மரணத்திற்கான காரணம்

சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை, மக்களை மகிழ்வித்த கலைஞர் ரோபோ சங்கர் மறைவுக்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் அறிக்கைப்படி, இரைப்பை குடல் ரத்தப்போக்கு அதிகமானதால், பல உடல் உறுப்புகள் திடீரென செயல் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும், அது பலனளிக்காததால் நேற்று இரவு 9.05 மணி உயிர் பிரிந்துள்ளது.