News March 28, 2024
கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்

தொடர் விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் சத்தமில்லாமல் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளன. வழக்கமாக சாதாரண இருக்கை வசதி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை, கோவைக்கு ரூ.700 முதல் ரூ.1,000 வரை கட்டணம் பெறப்படும். ஆனால் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் அதிகம் செல்வதை பயன்படுத்தி ரூ.5,000ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
தஞ்சை பல்கலை.,யில் ஆந்திர மாணவன் விபரீத முடிவு!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை.,யில் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ், 4-வது மாடியிலிருந்து குதித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
News November 8, 2025
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

SIR விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நாளை(நவ.9) திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்களும் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, SIR நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 11-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
மாதம் ₹10 லட்சம் கேட்கும் ஷமியின் மனைவி

சமீபமாக விவாகரத்து பெறும்போது சிலர் கேட்கும் ஜீவனாம்ச தொகை பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அப்படி நெட்டிசன்களின் கேள்விகளில் சிக்கியுள்ளார் ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான். அவர், ஷமி தனக்கு வழங்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது எனவும், ₹10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் வாதம் நடந்து வரும் நிலையில், உங்கள் கருத்து என்ன?


