News August 14, 2024
ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு – நெல்லை பயணிகள் அதிர்ச்சி

சுதந்திர தினம் மற்றும் சனி ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 2700 ரூபாய் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Similar News
News October 22, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.22] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 22, 2025
வேளாண்மை பட்டதாரிகளுக்கு புதிய வசதி

நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News October 22, 2025
நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்., இத பன்னுங்க

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.