News October 21, 2025
Ombrophobia: மழையை பார்த்து பயப்படும் மனிதர்கள்

மழையை பார்த்தால் சிலருக்கு அச்சம் ஏற்படும். அதுவே Ombrophobia எனப்படுகிறது. இது பொதுவாக இளம் பருவத்தினர், குழந்தைகளிடையே காணப்படுகிறது. மழை பெய்யும் என செய்திகள் வெளியானால், அன்று எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். படபடப்பு, நடுக்கம், பயம், மார்பு வலி, தலைச்சுற்றல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதற்கான சிகிச்சை எதுவும் இல்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 22, 2025
நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமுடன் இருங்கள்!
News October 22, 2025
4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
News October 22, 2025
ராசி பலன்கள் (22.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.