News August 4, 2024
Olympics: ரிங் ஜிம்னாஸ்டிக்ஸை கௌரவித்த சிறப்பு டூடுல்

பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 10ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், மெட்ரோ ரயிலுக்குள் நீல நிறப் பறவையொன்று, அதன் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற குறியீடு இடம்பெற்றுள்ளது. ஆடவர்களுக்கான ரிங் ஜிம்னாஸ்டிக்ஸ் இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. <<-se>>#Olympics<<>>
Similar News
News August 9, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
TN அரசின் கல்வி கொள்கைக்கு கமல் வரவேற்பு

TN அரசின் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது பதிவில், மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கம் செய்திருப்பதும், அநீதியான நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக் கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை என புகழ்ந்துள்ளார்.
News August 9, 2025
கவர்னர் இல.கணேசனுக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சை

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், அவரது சென்னை வீட்டில் நேற்று வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்போலோ ஹாஸ்பிடலில் ICU பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக மூத்த தலைவராக அறியப்படும் அவர், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கவர்னராக இருந்துள்ளார்.