News August 5, 2024

OLYMPICS: உலகின் அதிவேக வீரர் & வீராங்கனை

image

ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் 100 மீ.,ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. மகளிருக்கான பிரிவில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் அல்பிரெட் பந்தய தூரத்தை 10.72 வினாடிகளில் எட்டிப்பிடித்தார். அதேபோல, ஆடவருக்கான பிரிவில் அமெரிக்க வீரர் லைலீஸ் இலக்கை 9.78 வினாடிகளில் அடைந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் உலகின் அதிவேக வீரர் & வீராங்கனையாக இருவரும் உருவெடுத்துள்ளனர்.

Similar News

News March 17, 2026

8 MP-க்களின் இடைநீக்கம் ரத்தாகிறது

image

லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 MP-க்கள் ஏப்ரல் 2-ம் தேதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் தண்டனையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இடைநீக்கத்தை ரத்து செய்ய சபாநாயகர் நேற்று முடிவெடுத்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 17, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 17, பங்குனி 3 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News March 17, 2026

தொகுதி பங்கீடு பிரச்னை…. CPM எழுப்பும் கேள்வி

image

காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கும் போது CPM-க்கு வழங்குவதில் என்ன சிக்கல் என சண்முகம் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் 60 தொகுதிகள் கூட வாங்கிக் கொள்ளட்டும்; அதைப் பற்றி தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால், காங்., கூடுதலாக கொடுக்க வாய்ப்பிருக்கும் போது ஏன் இடதுசாரிகளுக்கு குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!