News August 8, 2024
Olympics: ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வெல்லுமா?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. ஒலிம்பிக்ஸ் அரங்கில், ஸ்பெயினுக்கு எதிராக விளையாடிய 10 போட்டிகளில், இந்தியா 7இல் வென்றுள்ளது. இது தொடரும் பட்சத்தில், கடந்த முறை வெண்கலம் வென்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மீண்டும் பதக்கம் வெண்கலம் வென்று நாடு திரும்பலாம்.
Similar News
News October 15, 2025
கிரிக்கெட்டில் நடக்காத ஒன்று, ஹாக்கியில் நடந்தேறியது!

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் போனது பேசுபொருளானது. இவர்களை பார்த்து WC போட்டியில் மகளிர் அணியும் அதையே செய்தனர். ஆனால், நேற்று நடந்த Johor Cup ஹாக்கி போட்டியில் பாக்., அணியினருடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கினர். இந்நிலையில், விளையாட்டில் அரசியலை கலக்காத ஹாக்கி வீரர்களின் இச்செயல் பாராட்டை பெற்று வருகிறது.
News October 15, 2025
₹2000 வரை குறைந்தது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தீபாவளியையொட்டி, சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் சிவசங்கர் அதிரடியால் கட்டணம் குறைந்துள்ளது. மதுரைக்கு ₹4000ஆக இருந்த கட்டணம் ₹2,600-ஆகவும், நெல்லைக்கு ₹5000-ஆக இருந்த கட்டணம் ₹2000-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ₹1,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
ஆட்சியில் பங்கு; முடிவை அறிவித்த சிபிஎம்

ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துவருவதாகவும், இதனால் அறிவாலயத்தில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.