News August 4, 2024
OLYMPICS: உலகின் அதிவேக வீரர் யார்?

ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் 100 மீ., ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதி & இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர் உலகின் அதிவேக வீரர் என்று அழைக்கப்படுவதால் இந்த மின்னல் வேக ஓட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். நடப்பு சாம்பியன் ஜேக்கப்ஸ் (இத்தாலி), லைல்ஸ் (USA), லூயி (UK), தாம்சன் (ஜமைக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அரையிறுதி களம்காணவுள்ளனர்.
Similar News
News November 9, 2025
பாக்., ராணுவத்தில் முக்கிய மாற்றம்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவிடம் பாடம் கற்ற பாகிஸ்தான், அதன் அடிப்படையில் ராணுவத்தில் புதிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. இந்தியாவின் முப்படை தலைமை தளபதி (CDS) பதவியை போல, ஒரு தலைமை தளபதி (CDF) பதவியை உருவாக்க உள்ளது. இதன்மூலம், தற்போது பாக்., அரசு & அதிபரிடம் உள்ள ராணுவத்தின் மீதான அதிகாரங்களும் CDF-க்கு மாற்றப்படும். தற்போதைய தளபதியான ஆசிம் முனீர் CDF ஆக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
News November 9, 2025
சிறப்பான கூட்டணி அமையும்: இபிஎஸ்

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என EPS தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை எனத் தெரிவித்த அவர், திமுக கூட்டணியை நம்புகிறது, அதிமுக மக்களை நம்புகிறது எனக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ₹10 லட்சம் கோடி தொழில் முதலீடு என்பது பொய்யான தகவல் என்றும், ₹68,570 கோடி அளவிலான முதலீடுகளே ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் EPS குற்றஞ்சாட்டினார்.
News November 9, 2025
ராசி பலன்கள் (09.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


